/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாறல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
துாறல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 02, 2024 03:06 AM
ஈரோடு மாவட்டத்தில் தொடர் துாறல் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெஞ்சால் புயலால், ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பரவலாக, துாறல் மற்றும் சாரல் மழை பெய்தபடியே இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் அத்தாணி, தோப்பூர், கரட்டூர்மேடு, கைகாட்டி, குப்-பாண்டபாளையம், கருல்வாடிப்புதுார், மூங்கில்பட்டி, கீழ்வாணி, சென்னிமலைக்கவுண்டன்புதுார், கூத்தம்பூண்டி, வெள்ளாளபா-ளையம், முனியப்பன்பாளையம், கூலிவலசு பகுதிகளில் துாறல் மழையால் மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதித்தது.
* கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று அதிகாலை 4:30 மணி முதல், லேசான துாறல் மழை பெய்தபடி இருந்தது. பொலவக்காளிபாளையம், நாதிபாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், கரட்டூர், பஸ் ஸ்டாண்டு சாலை, சத்தி சாலை, மொடச்சூர் சாலை, கோவை பிரிவு உள்ளிட்ட பகுதியில், லேசான துாறல் மழை பெய்தபடி இருந்தது. இதனால், பிரதான சாலையில் பயணிப்போர், வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளி-ரவிட்டபடி பயணித்தனர். அதேபோல், கொளப்பலுார், சிறு-வலுார், திங்களூர், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதியிலும், லேசான துாறல் மழை பெய்தபடி இருந்தது.
* பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான, குருப்பநாய்க்-கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காலிங்கராயன்பாளையம், சித்தோடு, செல்கலாப்பாறை, காடையம்பட்டி, தொட்டியபா-ளையம், ஜம்பை உள்ளிட்ட பல இடங்களில், நேற்று காலை, 8:௦௦ மணி முதல் துாறல் மழை பெய்தது. இதேபோல், அம்மா-பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, சென்னம்பட்டி, ஜரத்தல் உட்பட பல இடங்களில், காலையிலிருந்து லேசான துாறலும், மாலையில் ஒரு மணி நேரம் மித மழையும் பெய்தது. வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரத்தில் காலை, 8:௦௦ மணி முதல், மாலை, ௫:௦௦ மணி வரை துாறல் மழை பெய்தது.
* டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதுார், வாணிப்புத்துார், பங்களாபுதுார், கொண்டையம்பா-ளையம், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதி-களில் காலை முதல் இரவு வரை, இடைவிடாது துாறல் மழை, மிதமான மழை மாறி மாறி பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
-நிருபர்கள் குழு-