/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத் பூஜை கொண்டாடிய வட இந்திய மக்கள் களைகட்டிய கருங்கல்பாளையம் காவிரி கரை

ADDED : அக் 29, 2025 01:02 AM
ஈரோடு,சத் பூஜை எனப்படும் சூரியனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வை, பீஹார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதாவது உயிர்களை காக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது இவ்விழா நோக்கம். சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தின் போதும் நீர் நிலைகளில் நின்று, பிரசாதம் படைத்து வழிபடுவர்.
இப்பூஜை கடந்த, 25ல் துவங்கியது. பக்தர்கள் விரதமிருந்து சத் பூஜை மேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரியில் நேற்று முன்தினம் மாலை துவங்கி ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சேர்ந்த வட இந்தியர் மக்கள், விளக்கேற்றி இரவு வரை வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை, 4:15 மணி முதல் காலை, 7:15 மணி வரை சிறப்பு பூஜை நடத்தி காவிரியில் விளக்கேற்றி பூஜை செய்தனர். பின் சூரிய பகவானுக்கு உணவு வகைகளை படைத்து வழிபட்டனர். இந்த பூஜைக்கா வட இந்திய மக்கள் குடும்பத்துடன் குவிந்ததால், கருங்கல்பாளையம் காவிரி கரை களை கட்டியது.