/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலையில் திருக்கல்யாண வீதியுலா
/
சிவன்மலையில் திருக்கல்யாண வீதியுலா
ADDED : அக் 29, 2025 01:01 AM
காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலின், கந்த சஷ்டி விழா நிகழ்வில் சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு, மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கிரிவீதியில் நடந்தது.
இந்நிலையில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
இரவு, 6:50 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பிறகு நான்கு வீதிகளில் திருவுலாக்காட்சி நடந்தது. விழாவையொட்டி, 1,000 பேர் சஷ்டி விரம் கடைபிடித்தனர். இவர்கள் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள், மக்கள் என, 5,௦௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சஷ்டி விழா இன்று நிறைவடைகிறது. இதை தொடர்ந்து சுவாமி திருமலைக்கு எழுந்தருள்கிறார்.
* தாராபுரம், சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று காலை சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதேபோல் சோளக்கடை வீதி பாலதண்டாயுதபாணி கோவிலிலும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
* ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிகோவில் கனககிரி குமரன் மலையில், கந்தசஷ்டி விழாவை ஒட்டி, வள்ளி-தெய்வானை சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

