/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாயகம் திரும்பியோர் நிலம் ஆக்கிரமிப்பு செப்.,30ல் போராட்டம் நடத்த அறிவிப்பு

ADDED : செப் 24, 2024 02:55 AM
ஈரோடு: சித்தோடு அருகே எலவமலை, மூவேந்தர் நகர், சக்தி நகரில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:தாயகம் திரும்பிய மக்கள் வீடு கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட வீட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் அடமானமாக வைத்திருந்த கிரைய பத்திரம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆகியவற்றை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க, முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்., மாதம், 22ல் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை, சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், இன்னும் சிலர் முள் வேலி அமைத்தும், இடைத்தரகர்கள் மூலம் விற்பனையும் செய்து வருகின்றனர்.இதுபற்றி தொடர்ந்து மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டு வசதித்துறை அமைச்சர், கலெக்டரிடம் மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காததால் வரும், 30ல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த
திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.