/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி நோட்டீஸ் வினியோகம் அரசு கல்லுாரியில் பரபரப்பு

ADDED : ஆக 15, 2025 02:13 AM
ஈரோடு, ஈரோட்டில் சத்தி சாலையில் உள்ள, சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், திராவிடர் தளம் என்ற பெயர் கொண்ட நோட்டீஸ்களை, இரு பெண்கள் என ஏழு பேர், நேற்று காலை வினியோகம் செய்தனர்.
ஹிந்து மதம், ஹிந்து கடவுகளை இழிவுபடுத்தி மூன்று பக்க அளவுக்கு வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகள், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் ஏழு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் திராவிடர் தள ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, 32; பல்லடத்தை சேர்ந்த கருப்புசாமி, 47, சந்திரன், 44, வடிவேல், 36, சந்திரசேகர், 56, பெருந்துறையை சேர்ந்த பரிமளம், தாமரை என தெரியவந்தது. போலீஸ் அனுமதி பெறாமல் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.