/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்
/
நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்
நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்
நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்
UPDATED : நவ 03, 2024 01:46 AM
ADDED : நவ 03, 2024 01:38 AM

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி துவங்கி டிச. 20 ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தொடரின் போது முக்கிய மசோதாக்களான ‛ஒரு தேசம், ஒரு தேர்தல்'' , வக்பு வாரிய திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றிட மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து ஆண்டு தோறும் நவ.26, தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75வது தினத்தையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு கூட்டுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.