/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுால் பேல் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
நுால் பேல் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 24, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, கிருஷ்ணகிரியில் இருந்து கோவைக்கு, நுால் பேல் ஏற்றிய ஒரு டாரஸ் லாரி புறப்பட்டது. பவானி கூடுதுறை பிரிவு வழியாக நேற்று மதியம் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
டிரைவரான நசியனுாரை சேர்ந்த குருராஜ், 46, லேசான காயத்துடன் தப்பினார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

