ADDED : ஆக 14, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;தமிழ்நாடு
கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக
வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லோகநாயகி தலைமை
வகித்தார்.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல்
பொறுப்பு பார்க்கும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை
வழங்க வேண்டும். சீராக நடந்து கொண்டிருக்கும், 2.0 வெர்ஷன் ஆன்லைன்
பணிகளை, முழுமையான பயிற்சி கொடுப்பதற்கு முன்பே, 3.0 வெர்ஷன் கொண்டு
வந்து, இலக்கீட்டை அடைய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.இணைய
தள பணிகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், கூடுதலாக அனைத்து
ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களை'
நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
