/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊட்டச்சத்து மேலாண்மை இயக்க துவக்க விழா
/
ஊட்டச்சத்து மேலாண்மை இயக்க துவக்க விழா
ADDED : ஜூலை 10, 2025 01:33 AM
ஈரோடு,  சென்னிமலை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அரங்கில்
நடந்தது.
சென்னையில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், காணொலி மூலம் இங்குள்ள விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் துறை மூலம், 25 விவசாயிகளுக்கு துவரை, தட்டை பயறு, அவரை விதை அடங்கிய இலவச விதை தொகுப்புகளை துணை வேளாண் அலுவலர் பாலாஜி, வேளாண் அலுவலர் செந்தில்செல்வி, உதவி வேளாண் அலுவலர்கள் வேலுமணி, மணிகண்டன், தேவகி, தேவி ஆகியோர் வழங்கினர்.
தோட்டக்கலை துறை மூலம் காய்கறி விதைகள், எலுமிச்சை, கொய்யா, பப்பாளி போன்ற பழக்கன்றுகளை இலவசமாக தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கனிமொழி, உதவி அலுவலர்கள் அருள்செல்வன், தேவராஜ், தினேஷ் ஆகியோர் வழங்கினர்.
துணை வேளாண் அலுவலர் பாலாஜி, வேளாண் துறையில் மானிய திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிலக்கடலை, சோளம், கம்பு, உளுந்து போன்ற விதைகள் மானிய விபரங்கள் குறித்தும், உயிர் உரங்கள், நுண்ணுாட்டங்கள், உயிரியல் காரணிகளையும் மானிய
விபரங்களையும் விளக்கினார்.
பங்கேற்ற விவசாயிகளுக்கு விதை தொகுப்பு, பழச்செடிகள், தொழில் நுட்பம் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

