/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 08, 2025 04:23 AM
ஈரோடு:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலை-வர்கள் செல்வி, கவுரி, முருகன் முன்னிலை வகித்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்க-ளுக்கு கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, 6,750 ரூபாய் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு சமையலர், உதவியாளர்க-ளுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள அடிப்படை பணியாளர் பணியிடங்களில் முறையான காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மொபைல்போன் வழங்காமல், சிம் கார்டு மட்டும் வழங்குவதை நிறுத்த வேண்டும். சத்துணவில் பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வலியு-றுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வெங்கிடு, உஷா, செந்தாமலர், ரவிதாஸ், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

