/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் சென்னிமலை, டிச. 12-

ADDED : டிச 12, 2024 01:53 AM
சத்துணவு துறையில், 70 ஆயிரம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து அரசுத்துறை காலியிடங்களில், சத்துணவு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறுவோருக்கு, ரூ.6,750ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மாதாந்திர சில்லரை செலவினமாக, 250 ரூபாய் வழங்க வேண்டும். ஆண், பெண் பேதமின்றி, 10 ஆண்டுகள் பணி முடித்த அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அரசு ஊழியரை போல சத்துணவு ஊழியர்களுக்கும், 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சுந்தரம் தலைமையில், சென்னிமலை யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் பாஸ்கர்பாபு, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பேசினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, புன்செய் புளியம்பட்டி, டி.என்.பாளையம், பெருந்துறை, நம்பியூர் ஆகிய இடங்களிலும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.