/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு சிறு விபத்துகள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு

ADDED : மார் 17, 2025 04:26 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் நுாற்றுக்ணக்கான அரசு, தனியார் உள்ளூர், வெளியூர் பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பய-ணிக்கு வந்து போகின்றனர். பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் போதிய இடவசதியின்றி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்க முடியாத நிலை உள்ளது. சிறு விபத்துகளும் அதிகம் நடந்ததால், பல மாதங்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்-டன. இதனால் சிறு விபத்துகள் தவிர்க்கப்பட்டு, மக்களும் பாது-காப்பாக சென்று வந்தனர். தற்போது மீண்டும் சாலையோரத்தை ஆக்கிரமித்து தற்காலிக கடை நடத்துவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சாலையோரத்தில் கடைகள் அமைப்பதால், பஸ்கள் வேறு வழியின்றி பஸ்கள் வந்து செல்லும் பாதையை ஒட்டி பஸ்களை நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது. இது வாகன விபத்துக்கு வழிவகுக்கிறது. சாலையோர கடைகள் அகற்றப்பட்டபோது பஸ்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. இப்போது அந்நிலை முற்றிலும் மாறியுஉள்ளது. சாலையோர கடைகள் முன் மக்கள் கூடி நிற்பதால், பஸ்சை சாலையோரமாக நிறுத்த முடியவில்லை. இது பிற பஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. சாலையோர கடைகளை மாநகராட்சி அகற்றினால் வாகனங்கள் இடையூறின்றி சென்று வரும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.