/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர்; மாநகரில் பாதசாரிகள் பரிதவிப்பு
/
சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர்; மாநகரில் பாதசாரிகள் பரிதவிப்பு
சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர்; மாநகரில் பாதசாரிகள் பரிதவிப்பு
சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர்; மாநகரில் பாதசாரிகள் பரிதவிப்பு
ADDED : மே 29, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோட்டில் மிக முக்கிய ரோடுகளில் உள்ள பல கடைக்காரர்கள், தங்கள் கடையின் முன்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.
குறிப்பாக மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக சத்தி ரோட்டில் இருபுறமும் வணிக நிறுவனங்களின் விளம்பர பேனர், நடைபாதையை அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி கடைகளின் பொருட்கள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கின்றனர். இந்த கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையை ஒட்டி நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து பிளக்ஸ் பேனர்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சத்தி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அனைத்து கடைகளின் விளம்பர பலகைகளும் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. காந்திஜி ரோடு, கால்நடை மருத்துவனை ரோடு, ஸ்டேட் வங்கி சாலையை ஒட்டி மக்கள் நடந்து செல்ல பேவர் பிளாக் பதித்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை கடைக்காரர்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். மாநகரில் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதையை மீட்க வேண்டும். பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.