/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு எண்ணிக்கைக்கு அலுவலர் தேர்வு தீவிரம்
/
ஓட்டு எண்ணிக்கைக்கு அலுவலர் தேர்வு தீவிரம்
ADDED : மே 10, 2024 07:03 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, ஜூன், 4ம் தேதி நடக்கவுள்ளது.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக ஓட்டு எண்ணும் பணியில், அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவர். தற்போது கோடை காலம் என்பதால், தண்ணீர் பிரச்னையை சமாளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓட்டு எண்ணும் பணியில், ஆசிரியர், பேராசிரியர்களை அதிகம் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பள்ளி மற்றும் கல்லுாரி வாரியாக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.