/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.ஏ.பி., விவசாயிகளுக்கு உறுதியளித்த அதிகாரிகள்
/
பி.ஏ.பி., விவசாயிகளுக்கு உறுதியளித்த அதிகாரிகள்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
காங்கேயம் : காங்கேயம், வீரணம்பாளையம் கிராமம் அருகே பி.ஏ.பி., கிளை வாய்க்கால் செல்கிறது.
தற்போது தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் பி.ஏ.பி., பழைய தரைபாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலமானது சரியான நேர்கோட்டில் இல்லை என்றும், இதனால் சீராக தண்ணீர் செல்ல வழி வகை இல்லையென்றும், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைகால்வாய், காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுச்சாமி தலைமையில், 40 விவசாயிகள் பங்கேற்ற கவன ஈர்ப்பு கூட்டம் நடந்தது. இதையறிந்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கணேஷமூர்த்தி, சத்ய பிரபா மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கர், காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பி.ஏ.பி., கிளை வாய்க்கால் செல்லும் ரோட்டின் இருபுறமும், சேம்பர் அமைத்து தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக, அதிகாரிகள் உறுதி கூறினர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.