ADDED : ஜூலை 16, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை அருகே, பூதப்பாடி ஒழுங்குமுறை
விற்பனை கூடத்தில், விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக
கொண்டு வருகின்றனர். நேற்று 5,000க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டை
விற்பனைக்கு வரத்தானது.
விற்பனையின் போது, முறைகேடு நடக்காமல்
இருப்பதற்காக, ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர்
கலைச்செல்வி ஆய்வு செய்தார். மேலும் தரமான உலர் பருத்திகளை கொண்டு
வந்து, அதிக விலைக்கு விற்று செல்லுமாறு விவசாயிகளிடம் அவர் கூறினார்.
