ADDED : ஜூலை 16, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் திருவிழா, ஆக., 12 முதல் 15
வரை நடக்கிறது. இதையொட்டி, புதுப்பாளையம் பாலம் முதல்,
தண்ணீர்பந்தல் வரை கடைகள் அமைக்க, அந்தியூர் யூனியன் அலுவலகத்தில்
நேற்று ஏலம் நடந்தது.
பி.டி.ஓ., அமுதா, மேலாளர் சக்திவேல்
முன்னிலையில் நடந்த ஏலத்தில், அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்த,
70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 20 லட்சத்து 60 ஆயிரம்
ரூபாய்க்கு பருவாச்சி கோபிநாத் என்பவர் ஏலம் எடுத்தார். ஜி.எஸ்.டி.,
சேர்த்து மொத்தம், 24 லட்சம் செலுத்த வேண்டும். கடந்தாண்டை காட்டிலும்
கூடுதலாக, 7 லட்சம் ரூபாய்க்கு கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
