தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


ADDED : ஜூலை 16, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

* ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜப்பா தலைமையில், ஜி.எச்., ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி,

நிர்வாகிகள் விஜயபாஸ்கர், புனிதன், பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

* ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா., சார்பில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் ரபீக், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தார். பெரியசேமூர் பகுதியில், தொண்டர் சீர் பரவுவார் தங்கவேலனார் இளைஞர் கல்வி நிலைய குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள், இனிப்புகளை நிர்வாகிகள் தங்கராஜ், தீபக், சரவணகுமார் உள்ளிட்டோர் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us