/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு ௨வது முறையாக திரும்பிய அதிகாரிகள்

ADDED : ஜன 03, 2025 01:31 AM
விநாயகர் சிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
௨வது முறையாக திரும்பிய அதிகாரிகள்
டி.என்.பாளையம், ஜன. 3-
டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில், சத்தி -அத்தாணி சாலையில் அரசமரம் பஸ் நிறுத்தத்தில், நுாற்றாண்டு பழமையான அரசமரம் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு கோவில் சொந்தமானது என ஒரு தரப்பு பொதுநல வழக்கு தொடர்ந்து, அதில் நெடுஞ்சாலை துறைக்கு சாதகமான தீர்ப்பும் பெற்றது. இதையடுத்து கடந்த நவ.,8 ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். மக்கள் எதிர்ப்பால் திரும்பி சென்றனர். நேற்று காலை மீண்டும் நெடுஞ்சாலை, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதையறிந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். விநாயகர் சிலை மற்றும் அரச மரத்தை அகற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதில் தீர்ப்பு வரும் வரை மரம் மற்றும் சிலையை அகற்றக்கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் குழு திரும்பியது. இதனால் காலை, ௬:௦௦ மணி முதல், ௮:௦௦ மணி வரை அப்பகுதியில் பதற்றம் நிலவியது.