sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை அளவிட எதிர்ப்பு குடியிருப்புவாசிகளால் திரும்பிய அதிகாரிகள்

/

ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை அளவிட எதிர்ப்பு குடியிருப்புவாசிகளால் திரும்பிய அதிகாரிகள்

ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை அளவிட எதிர்ப்பு குடியிருப்புவாசிகளால் திரும்பிய அதிகாரிகள்

ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை அளவிட எதிர்ப்பு குடியிருப்புவாசிகளால் திரும்பிய அதிகாரிகள்


ADDED : ஜன 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்ய குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

பவானி அருகே சூரியம்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட பெருமாள்-மலை மங்களகிரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5.75 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை படிப்படியாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடு கட்டி

வசிக்கின்றனர். இந்நி-லையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆக்கிரமித்த கோவில் நிலத்தை வரன்முறைப்படுத்தி, வாடகை நிர்ணயம் செய்து வசூலிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்-தது. இது

சம்பந்தமாக கடந்தாண்டு நவ., 4ம் தேதி அப்பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும், 56 ஆக்கிரமிப்பா-ளர்கள், குடியிருப்பை அளவீடு செய்ய சம்மதித்து விண்ணப்பம் வழங்கினர். இந்நிலையில் வீட்டுமனை இடத்தை அளவீடு செய்ய, மங்களகிரி பெருமாள் கோவில் செயல்

அலுவலர் கயல்-விழி, ஆய்வாளர் ஆதிரை, வருவாய் துறையினர் மற்றும் சித்-தோடு போலீசார் நேற்று சென்றனர். இதையறிந்த குடியிருப்புவாசிகள், குடியிருக்க மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அளவீடு செய்யுங்கள் என்று கூறி, 25க்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் கேனுடன், பெருமாள்-மலை பஸ் நிறுத்தத்தில் சாலை

மறியலுக்கு முயன்றனர். போலீசார் கேன்களை பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி, பேச்-சுவார்த்தை நடத்தினர். தங்கள் கோரிக்கையில் அவர்கள் உறுதிய-தாக இருந்ததால், அதிகாரிகள் மற்றும் போலீசார் திரும்பினர். இதனால்

அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரப-ரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us