/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளால் பரபரப்பு
/
ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளால் பரபரப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே, கோவில் ஆக்கிரமிப்பை அக ற்ற வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபி அருகே எலத்துார் தெற்குபதியில், ரிசர்வ் சைட்டில் உள்ள பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற, எலத்துார் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று காலை, 10:30 மணிக்கு சென்றனர். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.
அப்போது அவர்கள் தங்களுக்கு, 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும், அதன்பின் தாங்களே அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், 'அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசுவதாகவும், அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாது' என தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.