/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் 'செல்பி' கண்டுக்காத அதிகாரிகள்
/
மொபைல் 'செல்பி' கண்டுக்காத அதிகாரிகள்
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 2,222 ஓட்டுச்சாவடிகளில், லோக்சபா தேர்தல் நேற்று நடந்தது.
பலர் ஓட்டுச்சாவடி அறைக்குள் மொபைல்போனில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இவற்றை தேர்தல் அலுவலர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஒரு சில வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி அறைக்குள் நின்று மொபைல் போன்களில் செல்பி எடுத்து ஜனநாயக கடமையை ஆற்றியதாவும், சிலர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டளித்ததாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதேபோல் ஓட்டுச்சாவடிக்குள் கரை வேட்டி, துண்டுகளுடன் அரசியல் கட்சியினர் பலர் சென்று வந்தனர். இவர்களை வெளியேற்றுவது பெரும் சிரமமாக இருந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.

