/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூலிப்படை மூலம் முதியவர் கொலை? நொய்யல் ஆற்றில் தேடுதல் வேட்டை
/
கூலிப்படை மூலம் முதியவர் கொலை? நொய்யல் ஆற்றில் தேடுதல் வேட்டை
கூலிப்படை மூலம் முதியவர் கொலை? நொய்யல் ஆற்றில் தேடுதல் வேட்டை
கூலிப்படை மூலம் முதியவர் கொலை? நொய்யல் ஆற்றில் தேடுதல் வேட்டை
ADDED : ஜன 01, 2024 11:30 AM
காங்கேயம்: கூலிப்படை வைத்து முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றில், சடலத்தை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டனர்.
காங்கேயம் அருகே காளிவலசை சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், 80; மனைவி மற்றும் 50 வயதை கடந்த திருமணமாகாத இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில், 30 ஏக்கர் நிலம் இவருக்கு உள்ளது. சோமசுந்தரத்தின் சகோதரி சொர்ணாத்தாளின் மகன் கொற்றவேல், 50; இவருக்கும் சோமசுந்தரத்துக்கும், பல ஆண்டுகளாக நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
கொற்றவேல் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி பழனிசாமி, ௫௦, கடந்த, 26ம் தேதி சோமசுந்தரம் வீட்டுக்கு சென்றுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மகனுக்கு பெண் இருப்பதாகவும், நேரில் வந்தால் பேசி முடித்து விரைவில் திருமணத்தை நடத்தலாம் எனக்கூறி அழைத்து சென்றதாக தெரிகிறது. மறுநாளும் தந்தை வீடு திரும்பாததால், சோமசுந்தரத்தின் மகன் ஜெயபிரகாஷ், காங்கேயம் போலீசில் புகாரளித்தார்.
போலீசார் விசாரணையில், சோமசுந்தரத்தின் மொபைல்போன் சிக்னல், இறுதியாக ஈரோடு மாவட்டம் வடபழனியை காட்டியது. அதேபோல் அவரை அழைத்து சென்ற பழனிசாமியும் மாயமாகியுள்ளார். இந்த இரு விஷயங்களையும்
தொடர்புபடுத்திய போலீசார், சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே சோமசுந்தரத்தை கொலை செய்து, ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான, 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார், தீயணைப்பு
துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் ஆகியோர், நொய்யல் ஆற்றில், 5 கி.மீ., துாரம் வரை நேற்று தேடினர். ஆனால், சடலம் கிடைக்கவில்லை. 'கூலிப்படை வைத்து முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.