/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை
/
வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை
ADDED : செப் 17, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை யூனியன் புதுப்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம் பகுதியில் எல்.பி.பி., வாய்க்காலில், 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், நேற்று திடீரென குதித்தார். அப்பகுதியில் இருந்த சிலர் இதைப்பார்த்து அதிர்ந்தனர்.
விரைந்து செயல்பட்டு அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். வயலட் மற்றும் மஞ்சள் நிற புடவை, கத்தரிப்பூ நிற ரவிக்கை, கழுத்தில் தாலி, காலில் மெட்டி இருந்தது. யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

