ADDED : டிச 02, 2024 03:50 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்-சியில், தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இதில் டி.ஜி.புதுார் அருகேயுள்ள வேட்டுவன்புதுாரை சேர்ந்த கருப்பாள், தனது தந்தைக்கு (பாத்தியம்) இடமிருப்பதாக கூறி, கடந்த, 29ம் தேதி குடிசை அமைத்தார். இந்நிலையில் வாணிப்-புத்துார் நில வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், சத்தி டி.எஸ்.பி., சரவணன் முன்னி-லையில், குடிசையை அகற்ற நேற்று வந்தனர். கருப்பாள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலம் தனக்கு சொந்தமானது என்று ஏதேனும் ஆவ-ணங்கள் இருந்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து காட்டுமாறு கருப்பாளிடம், போலீசார் தெரிவித்தனர். இதை கருப்பாள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, அதிகாரிகள் குடி-சையை முழுமையாக அகற்றினர்.