ADDED : ஆக 21, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
ரங்கசமுத்திரத்தை சேர்ந்த தம்பதி பட்டாபிராமன்-ராணி.
இவர்களின் மகன் கீர்த்தி வாசன், 34; இன்னும் திருமணமாகவில்லை.
காய்கறி வியாபாரம் செய்கிறார்.
தாய் ராணிக்கு, 66, ரத்த அழுத்தம்,
அல்சர் பாதிப்பு இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே
மகனுக்கு திருமணம் ஆகாததால் புலம்பியபடி இருந்தார். பட்டாபிராமன்,
கீர்த்திவாசன் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் ராணி நேற்று காலை
சாணிப்பவுடரை குடித்து விட்டார். விபரம் கேட்டபோது மகனுக்கு
திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் குடித்து விட்டதாக கூறினார்.
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
இறந்தார்.
