/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
ADDED : நவ 06, 2025 02:11 AM
ப.வேலுார், பரமத்தி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணியால், ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, நேற்று முன்தினம் மாலை கொடைக்கானலுக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில், 15 பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஜோசப் சுந்தர், 47, பஸ்சை ஓட்டினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடியை, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு கடந்த பஸ், கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் துாரத்தில், மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனால், அணுகு சாலை வழியாக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வழிகாட்டி பலகை வைக்கவில்லை. இதனால் வேகமாக சென்ற ஆம்னி பஸ், அணுகு சாலை பிரியும் இடத்தில் திடீரென பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத் கண்ணன், 38, சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், காவியா, 27, மனோஜ், 29, திவாகர், 53, சிக்கந்தர், 48, ரூபனா உமா சர்மா, 48, ஆகிய ஆறு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமத்தி போலீசார், ஆம்னி பஸ் டிரைவர் ஜோசப்
சுந்தர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

