ADDED : டிச 15, 2024 01:13 AM
பு.புளியம்பட்டி, டிச. 15-
பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்து வரத்து குறைந்ததால், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடி நடக்கிறது. குறிப்பாக மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மல்லிகை பூ செடிகளில் மொட்டுகள் கருகி வருகின்றன. இதனால் ஒரு ஏக்கர் தோட்டத்தில், 20 கிலோ பூக்கள் கிடைத்த நிலையில், இரண்டு கிலோவாக குறைந்து விட்டது. இதனால் நேற்று மல்லிகை பூ விலையும் உயர்ந்தது. புன்செய்புளியம்பட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ, 2,800 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை கிலோ, 1,125 ரூபாய், சம்பங்கி, ௫0 ரூபாய்க்கும் விற்பனையானது.