/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆம்புலன்ஸில் ஒன்று; ஆஸ்பத்திரியில் ஒன்று
/
'ஆம்புலன்ஸில் ஒன்று; ஆஸ்பத்திரியில் ஒன்று
ADDED : மே 01, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:பர்கூர்
வனப்பகுதி, தேவர்மலையை சேர்ந்தவர் தொட்டையன்.
இவரின் மனைவி சாக்கி,
35; நிறைமாத கர்ப்பிணியான சாக்கிக்கு நேற்று பிரசவ வலி
ஏற்பட்டுள்ளது. அவசர கால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பர்கூர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பாறைமேடு
என்ற இடத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை, சாக்கி பர்கூர் அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
தம்பதிக்கு ஏற்கனவே இரு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு, 16 வயது,
இரண்டாவது மகளுக்கு, 3 வயதாகிறது. தற்போது இரட்டை குழந்தை
பிறந்துள்ளது.