ADDED : ஜூன் 16, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லை, மாவெளி-பாளையம் - மகுடஞ்சாவடி இடையில், ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த நபருக்கு, 50 வயது இருக்கும். நீல நிற சாம்பல் பார்டரில், வெள்ளை கோடு போட்ட டீ-ஷர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ளார். யார், எந்த ஊர் என்பது குறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
