ADDED : நவ 17, 2026 04:36 AM
ஈரோடு; ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று, 140 ரூபாய்க்கு விற்றது. அதேசமயம் பிற காய்கறிகளின் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.
மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்):பெரிய வெங்காயம்-70, தக்காளி-25, முருங்கைகாய்-150, பச்சை மிளகாய்-80, பீன்ஸ்-100, கேரட்-100, மாங்காய்-100, இஞ்சி-160, அவரைக்காய்-100, புடலங்காய்-40,வெண்டைக்காய்-40, உருளை கிழங்கு-30, ஊட்டி உருளை-70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கார்த்திகை மாதம் பிறந்துள்ள சூழலில் தேவை அதிகரிக்கும். ஆனால் வரத்து குறைவாகவே இருக்கும். குறிப்பாக ஐயப்ப சுவாமி சீசன் என்பதால் கார்த்திகை துவங்கி தை முதல் வாரம் வரை, காய்கறி தேவை அதிகரிக்கும். எனவே காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.
