/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராசிபுரம் அருகே 180 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே வழிபாடு
/
ராசிபுரம் அருகே 180 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே வழிபாடு
ராசிபுரம் அருகே 180 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே வழிபாடு
ராசிபுரம் அருகே 180 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே வழிபாடு
ADDED : ஆக 04, 2025 09:02 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 180 ஆட்டு கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தினர்.ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்துக்கு அடியில் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம். நேற்று மாலை, அம்மனுக்கு பூ அலங்காரம், தோரணைகள் கட்டப்பட்டடன. மாலை முதல் வேண்டுதலுக்கு கிடா வழங்குபவர்கள் தங்களது கிடாக்களை கோவிலில் கட்டத்தொடங்கினர். இரவு, 8:00 மணிக்கு மேல் பக்தர்களும் அதிகளவு வரத்தொடங்கினர். ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள், 180க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்களை கோவிலுக்கு வழங்கினர். நேற்று நள்ளிரவில் பூசாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, முதல் கிடாவை வெட்டினார். தொடர்ந்து மற்ற கிடாக்களும் வெட்டப்பட்டன. விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் அதிகாலை முதல் சமபந்தி விருந்து நடந்தது. விழாவில் ஆண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மட்டுமே பங்கேற்று சமபந்தி விருந்து சாப்பிட்டனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.