ADDED : ஆக 04, 2025 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: தமிழக அரசு சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக சில மாவட்டங்களில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சேந்தமங்கலம் பகுதியில் உள்ள, ஐந்து ரேஷன் கடைகளில், நேற்று சோதனை முயற்சியாக 70 வயது முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் இருக்கும் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் கடை ஊழியர்கள் சென்று பொருட்களை வினியோகம் செய்தனர்.இதனால் முதியவர்கள், மாற்று திறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர்.