/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஈரோடு மணிக்கூண்டு, ரயில்வே ஸ்டேஷன் அருகே, கொல்லம்பாளையம், காசிபாளையம், கருங்கல்பாளையம் உட்பட பல இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்தனர்.
செயலாளர் ராமலிங்கம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தண்ணீர், நீர் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.