/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
ADDED : டிச 31, 2025 05:32 AM

ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவில் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பு நேற்று கோலாகலமாக
நடந்தது.
ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு தொடங்கியது. அரங்க-நாதருக்கு திருமஞ்சனம், பூஜை, மஹா தீபாராத-னையை தொடர்ந்து, 4:45 மணிக்கு சொர்க்க-வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்க-வாசல் வழியாக வெளியேறி கோவிலை வலம் வந்தார்.
கோவிலில் குழுமியிருந்த பக்தர்கள் ரங்கா, ரங்கா என முழக்கமிட்டனர். சுவாமியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக சொர்க்கவாசலை கடந்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியில் பகல் பத்து உற்சவம் முடிந்த நிலையில், ராப்பத்து உற்சவம் தொடங்-கியுள்ளது.
* சென்னிமலை மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக உற்சவர் அழைத்து செல்லப்பட்டார். முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம் அருகே அணிரங்க பெருமாள் கோவில், சென்னிமலை ஏகாந்த வெங்கடேசபெ-ருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. வெள்-ளோடு ஆளவாய் தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
* கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் காலை, 6:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. இதேபோல் கோபி ஈஸ்வரன் கோவில் வீதி வரதராஜ பெருமாள் கோவில், பச்-சைமலை முருகன் கோவில் வளாகத்தில் மரகத வெங்கடேச பெருமாள் கோவிலில், சொர்க்க-வாசல் திறப்பு நிகழ்வு,
வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
* சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவிலில், அதிகாலை, 5:40 மணிக்கு சொர்க்க-வாசல் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்-கரிக்கப்பட்ட சப்பரத்தில் வேணுகோபால சுவாமி பரமபதவாசல் வழியாக சென்று அருள்பா-லித்தார்.
* புன்செய்புளியம்பட்டி கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. நிகழ்வில் ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவாட்-டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், காத்-திருந்து தரிசனம் செய்தனர்.
* நம்பியூரில் விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:௦௦ மணிக்கு பரமபத வாசல் வழியாக விக்ரமநாரயண பெருமாள் எழுந்தருளினார். இதேபோல் பெருமுகை சஞ்சீ-விராய பெருமாள் கோவில், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க-வாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது.
* பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், ஆதிகேசவ பெருமாள் சன்னதியில், பரமபத வாசல் திறக்கப்பட்டு மேள தாள இசையுடன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார்.
இதேபோல் ஊராட்சிக்கோட்டை மலை பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நடந்தது.
-நிருபர் குழு-

