/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு திறப்பு
/
நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : ஆக 01, 2025 01:14 AM
காங்கேயம், காங்கேயம் நகராட்சியில், 16வது வார்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியை, மக்கள் பயன்பாட்டுக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நேற்று தொடங்கி
வைத்தார்.
இதை தொடர்ந்து நகராட்சி வார்டு, 10, 11, 12 பகுதி மக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் தாட்கோ சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை, முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
காங்கேயம் நகராட்சி சேர்மேன் சூரியபிரகாஷ், நகர செயலாளர் சேமலையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.