/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்வி கட்டணமின்றி நர்சிங் படிக்க வாய்ப்பு
/
கல்வி கட்டணமின்றி நர்சிங் படிக்க வாய்ப்பு
ADDED : டிச 23, 2024 09:27 AM
ஈரோடு : ஸ்ரீசாய் சிந்து பவுண்டேசன் கல்வி அறக்கட்டளை சார்பாக, கோபி அருகே அம்மன் கோவில்பதி கொளப்பலுாரில், ஸ்ரீசாய் சிந்து செவிலியர் கல்லுாரி வரும், 29ம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவ, மாணவியர், மூன்றாம் பாலினத்தவர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பை சார்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, ௪௭ பேருக்கு, நான்காண்டு முழுவதும், பிஎஸ்சி நர்சிங் படிப்பு, கல்வி கட்டணமின்றி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச சலுகையில் சேர்ந்து படிக்க விரும்புவோர், இன்னும் இரண்டு நாட்களுக்குள், 82783-66666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ஸ்ரீசாய் சிந்து பவுண்டேசன் கல்வி அறக்கட்டளை தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

