sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராமசபை கூட்டங்களில் உள்ளாட்சி தரம் உயர்வு, இணைப்புக்கு எதிர்ப்பு

/

கிராமசபை கூட்டங்களில் உள்ளாட்சி தரம் உயர்வு, இணைப்புக்கு எதிர்ப்பு

கிராமசபை கூட்டங்களில் உள்ளாட்சி தரம் உயர்வு, இணைப்புக்கு எதிர்ப்பு

கிராமசபை கூட்டங்களில் உள்ளாட்சி தரம் உயர்வு, இணைப்புக்கு எதிர்ப்பு


ADDED : ஜன 27, 2025 02:18 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியரசு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகு-தியில் இடைத்தேர்தல் நடப்பதால், ஈரோடு தாலுகாவுக்கு உட்-பட்ட பஞ்சாயத்துகள் தவிர மற்ற ஒன்பது தாலுகாக்களில் நடந்-தது. பல இடங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில், ஊராட்சி, பேரூராட்சிகளை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் மனு கொடுத்தனர்.

* சென்னிமலை யூனியனில், 22 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம-சபை கூட்டம் நடந்தது. தேர்வு பெற்ற தலைவர், வார்டு உறுப்பி-னர்கள் இல்லாமல் அதிகாரிகளால் நடத்தப்பட்டதால், கிராம-சபை கூட்டத்தில் மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்ட-வில்லை. குமாரவலசு ஊராட்சி கிராமசபை கூட்டத்தில், கிராம கணக்கு புத்தகம் கொண்டு வந்து படிக்க வேண்டும் என புகார் கூறினர். இதுகுறித்து பி.டி.ஓ.,வுக்கு வாட்ஸ் ஆப்பில் புகார் அனுப்பினர்.* சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சியை, பேரூ-ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு, நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றுமாறு, தனி அலுவலரிடம் மனு தரப்பட்டது.

* பவானிசாகர் யூனியன் நல்லுார் பஞ்., கிராமசபை கூட்டத்தில், தெருவிளக்குகள் எரியவில்லை. குடிநீர் வினியோகம் சரிவர செய்-யாததால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று மக்கள் புகார் தெரி-வித்தனர். மேலும் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சி-யுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

* பவானி அருகேயுள்ள மேட்டுநாசுவம்பாளையம் பஞ்., கிராம-சபை கூட்டம், ஈரோடு யூனியன் மண்டல துணை பி.டி.ஓ., தன-லட்சுமி தலைமையில் நடந்தது. மாநகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க கூடாது என ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கையெ-ழுத்திட்ட கோரிக்கை மனு, முன்னாள் பஞ்., தலைவர் மகேஸ்-வரன் தலைமையில் அலுவலர்களிடம் வழங்கப்பட்டது

-நிருபர் குழு-.






      Dinamalar
      Follow us