/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற எதிர்ப்பு
/
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற எதிர்ப்பு
ADDED : ஆக 19, 2025 02:59 AM
ஈரோடு, பவானி தாலுகா பெருந்தலையூர், குட்டிபாளையம் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கினர். மனு விபரம்:
பெருந்தலையூர், மஜரா செசையாம்பாளையம் பிரதான சாலை, பெருந்தலையூர் - குட்டிபாளையம் பிரதான சாலையில் இருந்து ஒதுக்குப்புறமாக, டாஸ்மாக் கடை (எண்- 3407) செயல்படுகிறது. இக்கடையால் மக்களுக்கு இடையூறில்லை. தற்போது கடையை பிரதான சாலைக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு மாற்றினால் மக்கள், பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். குட்டிபாளையம் - கவுந்தப்பாடி - பெருந்தலையூர் - ஆப்பக்கூடல் சாலையில் வருவதால் விபத்தும் அதிகரிக்கும். எனவே புதிய இடத்துக்கு டாஸ்மாக் கடையை மாற்றக்கூடாது.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.