/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப்பள்ளி இடத்தில் நிழற்கூடம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
/
அரசுப்பள்ளி இடத்தில் நிழற்கூடம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
அரசுப்பள்ளி இடத்தில் நிழற்கூடம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
அரசுப்பள்ளி இடத்தில் நிழற்கூடம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
ADDED : அக் 18, 2024 03:00 AM
அரசுப்பள்ளி இடத்தில் நிழற்கூடம்
அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
டி.என்.பாளையம், அக். 18-
டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி, சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கழிப்பறை சேதமானதால் இடித்து விட்டு, புது கழிப்பிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதே இடத்தில் நிழற்கூடம் அமைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. நேற்று அங்கு அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலத்திடம், பள்ளிக்கு சொந்தமான இடத்தில் நிழற்கூடம் அமைக்க கூடாதென ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தரப்பினர் நிழற்கூடம் வேண்டும் என்று கூறவே, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு சென்ற டி.என்.பாளையம் பி.டி.ஓ.,க்கள் மைதிலி, இந்திராதேவி ஆகியோர், 'நிழற்கூடம் அமைக்க பள்ளி கல்வித்துறையினர் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று, சான்று வழங்கினால் மட்டுமே அனுமதி தரப்படும்' என்றதால், மக்கள் கலைந்து சென்றனர்.