/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 19 ல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு
/
வரும் 19 ல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு
வரும் 19 ல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு
வரும் 19 ல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 11, 2024 11:34 AM
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் துணை ஆணையர் (பணிக்கொடை) முருகேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் வரும், 19ல் நடக்க உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கூட்டம் நடந்தது.
ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் தலைமை வகித்தார். துணை ஆணையர் (பணிக்கொடை) முருகேசன், உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், உதவி ஆணையர் (சமரசம்) ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் நாளான வரும், 19ல் அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்கள், கடைகளும், தங்களது தொழிலாளர்கள், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பள பிடித்தம் இன்றி, சம்பளம் வழங்க வேண்டும். இதை மீறி செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

