/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி சீருடைக்கு 3.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய உத்தரவு
/
பள்ளி சீருடைக்கு 3.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய உத்தரவு
பள்ளி சீருடைக்கு 3.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய உத்தரவு
பள்ளி சீருடைக்கு 3.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய உத்தரவு
ADDED : பிப் 16, 2025 03:55 AM
ஈரோடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, 4 செட் யூனிபார்ம் இல-வசமாக வழங்கப்படும். வருமாண்டுக்கு வழங்க தமிழக அரசு, 3.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய ஆணையிட்டுள்ளது.
தானியங்கி தறிகள், விசைத்தறி, கைத்தறி மற்றும் பெடல் தறி-களில் உற்பத்தி செய்யப்பட்டு, பிளீச்சிங், டையிங் செய்து, ஆடையாக தைத்து பள்ளி குழந்தைகளுக்கு வினியோகிக்கப்படு-கிறது.
ஈரோடு, திருச்செங்கோடு, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருநெல்வேலி கைத்தறி மற்றும் துணி நுால் சரகத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு பஞ்-சாலை கழகம் (நாடா இல்லா தறி) மற்றும் அனுமதிக்கப்பட்ட தானியங்கி தறிகளில் இயக்கப்படும்.
'டிரில்' எனப்படும் மாணவியரின் மேல் கோட், பாவாடை ஆகி-யவை, 1 கோடியே, 10 லட்சத்து, 59,018 மீட்டர் தானியங்கி தறி மூலம் இயக்கப்படுகிறது. 'கேஸ்மென்ட்' எனப்படும் மாணவர்க-ளுக்கான டிரவுசர், பேன்ட் துணிகள், 65 லட்சத்து, 89,112 மீட்டர் மட்டும் விசைத்தறிகளில் இயக்கப்படும்.
சர்ட்டிங்கில் பச்சை நிற கட்டமிட்ட சட்டை, 97 லட்சத்து, 96,324 மீட்டர் துணி உற்பத்தி செய்து, 1 முதல், 5 வரை படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வழங்-கப்படும்.
சந்தன நிற கட்டமிடப்பட்ட சட்டை, 1 கோடியே, 5 லட்சத்து, 51,996 மீட்டர் துணி உற்பத்தி செய்து, 6 முதல், 8 ம் வகுப்பு படிப்போருக்கு வழங்கப்படும். மொத்தமாக, 3 கோடியே, 79 லட்சத்து, 96,450 மீட்டர் துணி உற்பத்தி செய்ய திட்டம் வகுத்-துள்ளனர்.
மொத்த துணியில், 65.89 லட்சம் மீட்டர் துணி விசைத்தறி-யிலும், டிரில் துணி, 5 லட்சத்து, 49,720 மீட்டர் மற்றும், கேஸ்மென்ட், 21,600 மீட்டர் துணி கைத்தறியிலும், கேஸ்-மென்டில், 91 லட்சத்து, 53,840 மீட்டர் பெடல் தறியிலும் இயக்-கப்படும்.
இப்பணிகள் தற்போது துவங்கி உள்ளது. ஏப்., இறுதிக்குள், 2 செட் சீருடைகள் தைத்து, பள்ளி திறக்கும்போது மாணவ, மாண-வியருக்கு வழங்க உள்ளனர். மீதி, 2 செட் அடுத்த மூன்று மாதங்-களுக்குள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.