/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்
/
அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்
ADDED : மே 05, 2025 02:22 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அங்கக வேளாண் சாகுபடி மேற்-கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவ்வாறு விளைவிக்-கப்படும் விளைபொருட்களை விற்பனை செய்யவும், ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில், அங்-கக வேளாண் சந்தையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
இதில் அங்கக சான்று பெற்ற, 14 விவசாயிகள், அங்-கக முறையில் விளைவித்த புடலை, சுரைக்காய், வெள்ளரி, கத்தி-ரிக்காய், பீர்க்கன்காய், கொத்தவரை, பாகற்காய், தர்பூசணி, வாட்டர் ஆப்பிள், வாழை, எலுமிச்சை, மாம்பழம், கீரை வகைகள், அரிசியில் சீரக சம்பா, நாட்டு பொன்னி, நாட்டு சர்க்-கரை, புளி, ராகி பவுடர் உட்பட தாங்கள் விளைவித்த பொருட்-களை விற்பனை செய்தனர். இச்சந்தை காலை, 6:00 முதல் 9:00 மணி வரை செயல்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சந்தையில் பொருட்களை வாங்கி சென்றனர்.