/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்கள் தின மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
பெண்கள் தின மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெண்கள் தின மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெண்கள் தின மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : மார் 17, 2025 04:03 AM
ஈரோடு: உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் மாரத்தான் போட்டி நடந்தது. வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குந்தர் கல்வி கழகம் சார்பில், சிறுவர், சிறுமியர், பெண்கள் என ஆறு பிரிவுகளாக போட்டி நடந்தது
. 3 கி.மீ, 6 கி.மீ என நடந்த போட்டியில், 1,400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு செங்-குந்தர் பள்ளி மைதானத்தில் போட்டியை எஸ்.பி., ஜவஹர் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் பகுதி வழியாக சென்று, மீண்டும் செங்குந்தர் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. ஆறு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயம், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாரத்தானில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. போட்டி ஏற்-பாடுகளை பள்ளி நிர்வாகிகள் சிவானந்தன், மாசிலாமணி, ரவிச்-சந்திரன், புஷ்பராஜ்,
ரவி, கிருஷ்ணகுமார், முருகேசன் செய்தனர்.