/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாத சுவாமி கோவிலில் முதல் வன பூஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
/
குருநாத சுவாமி கோவிலில் முதல் வன பூஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
குருநாத சுவாமி கோவிலில் முதல் வன பூஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
குருநாத சுவாமி கோவிலில் முதல் வன பூஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 07, 2025 01:10 AM
அந்தியூர், அந்தியூர், புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும், 13 முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. கடந்த மாதம் 23ல், பூச்சாட்டுதலும், 30ல், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, மடப்பள்ளி மற்றும் வனக்கோவிலில் உள்ள சுவாமிக்கு அபிஷேக பூஜை நடந்து வருகிறது.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான முதல் வன பூஜை நேற்று நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சப்பர தேர்களில் எழுந்தருளிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காமாட்சி அம்மன் முன்னே செல்ல, பெருமாள் மற்றும் குருநாத சுவாமி பின் தொடர்ந்து சென்றன. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள வனக் கோவிலுக்கு சுவாமிகளை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். வழி
நெடுக காத்திருந்த பக்தர்கள், பூ, பழம், தேங்காய் உடைத்து
வழிபட்டனர்.
முதல் வனபூஜை நிகழ்வில், அந்தியூர் மற்றும் புதுப்
பாளையம் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு 8:00 மணிக்கு மூன்று சுவாமிகளுக்கும் விடிய விடிய சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பிறகு வனக்கோவிலிலிருந்து மூன்று சுவாமிகளும் மடப்பள்ளிக்கு வந்தடைந்தன.
சிறப்பு பஸ் இயக்கம்
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும், 13 முதல், 17 வரை நடக்கிறது. விழாவில் குதிரை மற்றும் மாட்டு சந்தை திருவிழா நடக்கிறது. இதற்காக அரசு போக்கு
வரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபி, சத்திய
மங்கலம், அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் ஆகிய பகுதி
களில் இருந்து, பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள்
இயக்கப்படுகின்றன.

