ADDED : செப் 04, 2026 06:16 AM
அந்தியூர்:அந்தியூர்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், நேற்று விடுத்து அறிக்கையில்
கூறியிருப்பதாவது: அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
பரப்பளவில் நெல் அறுவடை துவங்கியுள்ளது.
செப்., 1ல், அரசு
கொள்முதல் நிலையம் தொடங்கி, நெல் கொள்முதல் செய்யப்படும் என
எதிர்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அரசு நெல் கொள்முதல்
தொடங்கவில்லை. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டு மழை
அறிகுறியுடன் வானம் மிரட்டி வருகிறது. இந்நிலையில்
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, உணவுத்துறை அமைச்சர்
வெங்கட்ராமனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாளை (இன்று) முதல்
கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் வாங்கப்படும் என்று உறுதி
அளித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
