ADDED : ஜூன் 20, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் யூனியன் நல்லுார் பஞ்., பொன்னம்பாளையம், தாசம்பாளையம், காந்திபுரம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
முறையாக வேலை வேலை வழங்குவதில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நல்லுார் பஞ்., அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததால், கோரிக்கைகளை மனுவாக வழங்கி சென்றனர்.