/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆண்டு விழா
/
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆண்டு விழா
ADDED : ஏப் 21, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெருந்துறை யூனியன் முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியை உமாதேவி படித்தார். ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், குழந்தைகளின் பெற்றோர், புரவலர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைவர், நன்கொடையாளர், மக்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் நடனம், நாட்டியம், திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. விழா நிறைவில் மாணவர்கள், நன்கொடையாளர்களுக்கு கேடயம், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை ரதி நன்றி கூறினார்.

