/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்
/
சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்
ADDED : ஏப் 14, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் விழா நிறைவு நாளான நேற்று மகாதரிசனம் நடந்தது.
இதையொட்டி காலை, 11:௦௦ மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தி களுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர் உட்பட பல்வேறு திரவிய அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு சென்னிமலையின் நான்கு ராஜவீதிகளில் நடந்தது. இரவில் கோலாகலமாக நடந்த மஞ்சள் நீராட்டத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது.

