தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டப்பகலில் கன்றுக்குட்டியைகொன்ற சிறுத்தையால் பீதி

பட்டப்பகலில் கன்றுக்குட்டியைகொன்ற சிறுத்தையால் பீதி

பட்டப்பகலில் கன்றுக்குட்டியைகொன்ற சிறுத்தையால் பீதி


ADDED : மே 20, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மலை, ஆசனுாரில் அரேபாளையம் வனப்பகுதியை ஒட்டி சோமு என்பவருக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலம் உள்ளது. சென்டர்தொட்டியை சேர்ந்த சரவணன், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். தோட்டத்தில் நான்கு மாடுகள், இரு கன்று குட்டி வளர்த்து வருகிறார்.

நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மாடுகள் சத்தமிட்டதை கேட்டு ஓடி சென்றார். ஒரு சிறுத்தை, கன்று குட்டியை தாக்கி ரத்தத்தை குடித்து கொண்டிருந்தது. அவர் சத்தமிடவஏ சிறுத்தை ஓடிவிட்டது.

தகவலின்படி வனத்துறையினர் சென்றனர். இதில் சிறுத்தையால் தாக்கப்பட்ட கன்றுக்குட்டி பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us